Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தங்கம் விலை குறைந்தது

பிப்ரவரி 22, 2021 04:05

2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது.இந்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.4375க்கு விற்பனையாகிறது.

பவுனுக்கு ரூ.8 குறைந்து ரூ.35,000க்கு விற்பனையாகிறது.இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.38,072க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து 1 கிராம் ரூ.74.40க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.74,400 ஆக உள்ளது.

தலைப்புச்செய்திகள்