Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அ.ம.மு.க. பொதுக்குழு 25ந்தேதி கூடுகிறது- டிடிவி தினகரன் 

பிப்ரவரி 22, 2021 01:20

சென்னை:அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கழக துணைத்தலைவர் அன்பழகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) தலைமையில் வருகிற 25-ந் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி, தமிழகத்தின் 10 இடங்களை காணொளி வாயிலாக இணைத்து நடைபெறும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட ஊர்களில், தங்களுக்கான அழைப்பிதழோடு கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

தலைப்புச்செய்திகள்