Sunday, 16th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிகலாவிற்கு, ஓபிஎஸ் ஆதரவு கொடுத்தால் வரவேற்போம்- டிடிவி தினகரன்

பிப்ரவரி 19, 2021 03:42

சென்னை: சென்னையில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 பரதனாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தவறான முடிவால் ராவணனுடன் சேர்ந்தார். தற்போது அவர் மனகசப்பில் இருக்கிறார். சசிகலாவிற்கு மீண்டும் ஆதரவு கொடுத்தால் அதை வரவேற்போம்.

அ.ம.மு.க தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற பிறகு அ.தி.மு.கவை மீட்டெடுப்போம்.

சசிகலா நலமுடன் உள்ளார். வரும் 24ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று வீட்டில் அவரின் படத்திற்கு சசிகலா மரியாதை செலுத்த உள்ளார் என அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்