Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெடிகுண்டு தாக்குதலில் சதித்திட்டம்: மம்தா

பிப்ரவரி 18, 2021 02:43

கோல்கட்டா: அமைச்சர் ஜாகிஸ் ஹொசைன் மீதான வெடிகுண்டு தாக்குதல் சதித்திட்டம் நிறைந்தது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்

மேற்கு வங்கத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜாகிர் ஹொசைன், நேற்று (பிப்.,17) கோல்கட்டா செல்வதற்காக முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள நிமிதா ரயில் நிலையத்திற்கு வந்தபோது அவர் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அவரது கால் மற்றும் கைகள் காயமடைந்த நிலையில், அமைச்சர் ஜாகிர் ஹொசைன் ஜாங்கிபுர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவரை மருத்துவமனையில் நேரில் சென்று முதல்வர் மம்தா பானர்ஜி நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமைச்சர் மீதான இந்த தாக்குதல், சதித்திட்டம் நிறைந்தது. தாக்குதல் நடைபெற்ற போது ரயில் நிலையத்தில் அதிகாரிகள் யாரும் இல்லை. விளக்குகள் கூட எரியவில்லை. அசம்பாவிதம் நடைபெற்ற இடம் ரயில்வேக்கு சொந்தமானது. 

இதில் முறையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும். ஜாகிர் உசேன் பிரபலமான தலைவர் என்பதால், அவரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்