Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

பிப்ரவரி 16, 2021 12:49

சேலம்:தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கோவையில் நேற்று ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 123 ஜோடிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமணத்தை எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்தார்.பின்னர் அவர் மாலையில் கோவையில் இருந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதையடுத்து அவர் அங்கிருந்து இரவு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டுக்கு வந்தார்.இதனை தொடர்ந்து இன்று காலை சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் இந்த ஆண்டுக்கான திருமண நிதி உதவி, ‘தாலிக்கு தங்கம்’ வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் 35 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கப்பட உள்ளது.

ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் 2011-2012 முதல் 2017-2018 வரை 10-ஆம் வகுப்பு மற்றும் பட்டம், பட்டயம் பயின்ற 38,575 ஏழைப் பெண்களுக்கு ரூ.136 கோடி திருமண நிதி உதவியும், திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கம் வீதம் 1,54,300 கிராம் தங்கமும், 2017-2018 முதல் 2019-2020 வரை 16,400 ஏழைப் பெண்களுக்கு ரூ.62.28 கோடி திருமண நிதி உதவியும், திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் வீதம் 1,31,200 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்