Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மோசமான முன்னுதாரனத்தில் தமிழகம் முதலிடம்

ஏப்ரல் 06, 2019 06:45

திருவண்ணாமலை: தேர்தல் காலத்தில், வங்கி கணக்குகள் மூலம் பணப் பரிமாற்றம், முழுமையாக கண்காணிக்கப்படுகிறது. தேர்தலின் போது சுற்றி வரும் பணம், பெரும்பாலும் கணக்கில் வராததாகவே இருக்கிறது. வாகன சோதனைகள்வாயிலாக, அவற்றை முழுமையாக கண்டறிந்து, தடுத்துவிடமுடியாது. இந்த முறை, பணம் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது, தமிழகத்தில் தான். அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு, பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர் என, பாராட்டலாம் என்றாலும், உச்சகட்ட முறைகேடுகள், தமிழகத்தில் தான் நடக்கின்றன என்பது, வேதனையானசெய்தி. 

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே, திருவண்ணாமலையில் இருந்து, அரூர் நோக்கி வந்த அரசு பஸ்சில், இருக்கைகளுக்கு அடியில், ஏழு பைகள் கேட்பாரற்று கிடந்தன.அதில், 3.47 கோடி ரூபாய் இருந்தது. இது, பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.  

பெரம்பலுார் அருகே, பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில், விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் வந்தகாரில், 1.99 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் வீடு, அவரது மகனும், வேலுார் தொகுதி வேட்பாளருமான கதிர் ஆனந்தின் வீடு, கல்லுாரிகளில் நடத்தப்பட்ட சோதனையின் தொடர்ச்சியாக, அவரது ஆதரவாளர்கள், உதவியாளர் வீடுகளில் நடத்திய சோதனைகளில், கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. 

இதன் உச்சகட்டமாக, வேலுார் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்ற கருத்தும், உலா வருகிறது. ஏப்., 3 வரை நாடு முழுவதும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனைகளில், கணக்கில் வராத, 377.11 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. தமிழகத்தில், நேற்று முன்தினம் வரை, 140 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க, தங்கம் உட்பட இலவசங்கள் அளிப்பதில், தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. திருமங்கலம் முதல், ஆர்.கே.நகர் பார்முலா வரை தொடர்ந்து கொண்டிருக்கும், வாக்காளர்களுக்கான பணப் பட்டுவாடா, இந்த லோக்சபா தேர்தலில், 'தீவிர புயலாக' மாறி வலுப் பெற்றிருக்கிறது.வாக்காளர்கள் மனநிலை முழுமையாக மாறினால் ஒழிய, பணப் பட்டுவாடாவை தடுப்பது சிரமம். ஆனால், ஓட்டுக்கான விலை கூடுவது என்பது, வாக்காளர்களுக்கு வைக்கப்படும் விஷத்தின் அளவு அதிகரிக்கிறது என்பதே பொருள். 'ஓட்டுகள் விற்பனைக்கு அல்ல..

தலைப்புச்செய்திகள்