Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ஜா.க தேர்தல் அறிக்கை தாமத ரகசியம்

ஏப்ரல் 06, 2019 06:27

புதுடில்லி : லோக்சபா தேர்தலுக்காக காங்., தேர்தல் அறிக்கையை ஏப்.,02 அன்று வெளியிட்டது. ஆனால் பா.ஜ., இதுவரை தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. நாளை (ஏப்.,07) பா.ஜ., தேர்தல் அறிக்கை வெளியிடப்படலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பா.ஜ., திட்டம் பலிக்குமா? : கடைசி நிமிடத்தில் தேர்தல் அறிக்கை வெளியிட்டால் அது வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பா.ஜ., கருதுகிறது. இதற்கு முந்தைய தேர்தல்களிலும் பா.ஜ.,வின் இந்த வியூகம் ஓரளவிற்கு கை கொடுத்துள்ளது. இந்த ஆண்டு காங்., தேர்தல் அறிக்கைக்கு பிறகு வெளியிடப்பட உள்ள பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில், காங்.,ன் வாக்குறுதிகளுக்கு சற்றும் சளைக்காத வகையில் வாக்குறுதிகள் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. 
 
பா.ஜ.,வின் 20 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, காங்.,ன் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவசாயிகள், வேலைவாய்ப்புக்கள், உள்நாட்டு பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை மிஞ்சும் அளவிற்கு பல அம்சங்களை மாற்றி அமைக்கலாம் என கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்