Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாம் இருவர், நமக்கு இருவர் என்ற பாணியில் நாட்டை 4 பேர் ஆட்சி செய்கின்றனர்

பிப்ரவரி 11, 2021 01:24

புதுடெல்லி:காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களை எம்.பி.யுமான ராகுல் காந்தில் இன்று மக்களவையில் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது- இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்தான்; அதை உடைப்பதுதான் மத்திய அரசின் நோக்கம்.மண்டி அமைப்புகளை ஒழிப்பதே வேளாண் சட்டத்தின் மிக முக்கிய நோக்கம்.வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை கிடைக்கிறது? 4 நண்பர்களுக்காக இயற்றப்பட்டதுதான் இந்த வேளாண் சட்டம்

விவசாயி தனது விளை பொருட்களின் விலையை நிர்ணயிக்க, தொழிலதிபர் முன் சென்று நிற்க வேண்டும்.இந்தியாவை 4 பேர்தான் வழி நடத்தி வருகின்றனர், அந்த 4 பேர் யார் என அனைவருக்கும் தெரியும்.நாம் இருவர், நமக்கு இருவர் என்ற பாணியில் நாட்டை 4 பேர் ஆட்சி செய்கின்றனர்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள 2வது வேளாண் சட்டம், பொருள் பதுக்கலை ஊக்குவிப்பதாக இருக்கிறது.இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.ராகுல் காந்தி பேச்சுக்கு, பா.ஜ.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

தலைப்புச்செய்திகள்