Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பிப்ரவரி 09, 2021 01:15

கும்பகோணம்: கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில்  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் கீழ்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அதாவது தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை ரூபாய் 3000  வழங்கப்படுவது போல், தமிழகத்திலும் குறைந்தபட்சம் மாதம் 3000 மும் கடும் ஊனமுற்றோர் மாற்றுத்திறனாளிக்கு ரூபாய் 5000 தமிழக அரசு உயர்த்தி வழங்கிட வேண்டும் தனியார்துறை பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 சதவீத இடங்களை உத்தரவாதப்படுத்த ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 வலியுறுத்துகிறது.

 எனவே தனியார் துறையில் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 55 சதவீத வேலைவாய்ப்பு இடங்களில் உத்தரவாதப்படுத்திட தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றவேண்டும் அரசு துறையில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை 3 காலத்திற்குள் அறிவித்து முழுமையாக நிரப்பிடு 100 நாள் வேலை 200 நாட்களாக உயர்த்திடுக மாற்றுத் திறனாளிகளுக்கு நாலு மணி நேரம் வேலை முழு ஊதியம் 256 வழங்கிட உத்தரவாதப்படுத்திட வேண்டும்.

மாற்றுத்திறனாளியின் பாதுகாவலருக்கு உதவித்தொகை வழங்கிடுக உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாநில குழு உறுப்பினர் வாசுதேவன் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் சுகுமார்,   சிஐடியு மாவட்ட தலைவர் ஜீவபாரதி,  ஒன்றிய பொறுப்பாளர்கள் சுபாஷ் கிருஷ்ணமூர்த்தி, சேகர், சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். அடுத்து திடீரென கண்டன முழக்கங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மறியலில்  ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தலைப்புச்செய்திகள்