Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் கல்வி செம்மல் கேசவ் யாதவ்

ஏப்ரல் 05, 2019 12:13

ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி (எஸ்சி), திருவாடனை ஆகிய  தொகுதிகளுடன், விருதுநகர் மாவட்டத்தின் திருச்சுழியும், புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கியும் இணைந்துள்ளது ராமநாதபுரம் மக்களவை தொகுதி. 

1952-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 6 முறை வெற்றி பெற்றது. அ.தி.மு.க 4 முறையும் தி.மு.க 3 முறையும் இத்தொகுதியில் தங்களது வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன. 2014-ம் ஆண்டு நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க-வின் அன்வர் ராஜா 4,05,945 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க-வின் அப்துல் ஜலீல் 2,86,621 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார். 

பா.ஜ.க வேட்பாளர் குப்பு ராமு 1,71,082 வாக்குகளையும் காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர் 62,160 வாக்குகளையும் பெற்று தோல்வியைச் சந்தித்தனர். 2009 மற்றும் 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 68.67% வாக்குகள் பதிவாகியுள்ளன. வரும் மக்களவைத் தேர்தலில் இளம் வாக்காளர்களின் பங்களிப்பின் காரணமாக இந்த சதவீதம் மேலும் அதிகரிக்கும் என தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது. 

ராமநாதபுரம் தொகுதி கடலோரப்பகுதியை கொண்டது. விவசாயத்துக்கு அடுத்தபடியாக மீன்பிடித் தொழில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மண்டபம் மீன்பிடித் துறைமுகம் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கிறது. இவற்றை தவிர பரமக்குடியில் நெசவுத்தொழிலும் ஒரளவு பிரபலம். 

இந்த தொகுதியைச் சேர்ந்த பலர் தொழிலுக்காக  வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்வது வாடிக்கை. விவசாய பெருங்குடி மக்களுடன், மீனவ மக்களையும் அதிகமாக கொண்ட தொகுதி இது. 

30 வருசமாக தீர்க்கபடாததாக உள்ளது மீன்வர்கள் பிரச்சனை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் மீனவர்களுக்கு மீன்பிடிக்க போதுமான வசதிகளை ஏற்படுத்தித் தரப்படுவதோடு, இன்று மத்தியில் இருக்கும் ஆட்சி தனி அமைச்சகம் அமைத்துக் கொடுப்பதாகவும் கூறியது. ஆனால் எதுவும் நடக்கவில்லை என்று மீனவ மக்கள் கூறுகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் குடிநீருக்காக தினமும் 10 கி.மீ. தூரம் செல்ல வேண்டிய அவலம் நிலவுகிறது.  

மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு, குடிநீர் பிரச்சனைக்கு, முற்றுப்புள்ளி வைப்பது, ஒருங்கிணைந்த சுற்றுலா திட்டத்தை உருவாக்குவது, கமுதியில் சூரிய மின்சக்தி திட்ட விரிவாக்கத்திற்கு தடை, மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வை எதிர்பார்க்கிறார்கள் இராமநாதபுரம் மக்கள்.  

மேற்கண்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது உறுதி என்று கூறி களத்தில் இறங்கியுள்ள வேட்பாளர்களில் ஒருவராக பூர்வாஞ்சல் ஜனதா கட்சி (மதசார்பற்ற) சார்பாக வீணை சின்னத்தில் களம் காண இறங்கியுள்ளார் கல்வியாளர் கேசவ் யாதவ்.

கல்வி  செம்மல் கேசவ் யாதவ்: 

கல்வி கற்றவரிடம் ஒழுக்கம், பண்பு, நேர்மை இவைகள் அனைத்தும் ஒருங்கே அமைந்து காணப்படும். உயர்கல்வியை கவனமாக படித்து தேர்த்தி பெறுபவர்களின் வாழ்வே சிறப்பாக அமைகிறது. உயர்கல்வியை பொறுத்தவரை பொறியியல் படிப்பை படிக்க கூடிய மாணவர்களின் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 

எனினும்  அதில சரியான கல்லூரிகளை தேர்வு செய்வது மிக முக்கியமான ஒன்று. சரியான கல்லூரி, சரியான கோர்ஸ் ஒழுக்கமான நடைமுறை, படிப்பு  முடிந்ததும் வேலைவாய்ப்பு, ஆய்வக வசதிகள், போக்குவரத்து வசதிகள் என்று இருக்க கூடிய இன்ஜினியரிங் கல்லூரிகளைதான் மாணவர்கள்  பெரும்பாலும் எதிர்பார்க்கிறார்கள். 

அதனால் கல்லூரி எது என்பதை தேடி அலைந்து பிள்ளைகளை சேர்க்கிறார்கள். அந்த வகையில் அனைத்து வசதிகளும் ஒருங்கே பெற்ற  கல்லூரிகளின் வரிசையில் இடம்பிடித்துள்ளது லார்டு வெங்கடேஸ்வரா, லார்டு ஐயப்பா இன்ஜினியரிங் கல்லூரிகள். 2001ம் ஆண்டும் ஆண்டு தொடர்ங்கப்பட்ட சென்னை அருகே  காஞ்சிபுரம் மாவட்டம் புலியம்பாக்கம் தாம்பரத்தில் அமைந்துள்ள இந்த கல்லூரிகளை திறம்பட நடத்தி வருகிறார் கல்வியாளர் கேசவ் யாதவ்.  

பாடத்திட்டங்கள்:  

அடிப்படையில் ஆசிரியரான கேசவ்யாதவுக்கு ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான இன்ஜினியரிங் கல்வி வழங்க  வேண்டும் என்ற ஆவலும், ஆசையும் ஏற்பட்டது. இதற்கான தனது சொத்துக்களை முதலீடாக்கி இந்த கல்லூரிகளை தொடங்கியவர். 

டில்லியில் அகில இந்திய தொழிநுட்பக் கவுன்சில், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அனுமதியுடன் பி.இ.கம்ப்யூட்டர்  சயின்ஸ், பி.இ.எலக்ரிக்கல் அண்ட் கம்யூனிகேசன் இன்ஜினியரிங், பி.இ.சிவில் இன்ஜினியரிங், பி.இ.மெக்கானிக்கல் இன்ஜினியரிங், பிடெக்  ஐடி போன்ற பாடதிட்டங்கள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  

வெளி மாநில மாணவர்களுக்கும் கல்வி:  

தமிழ்நாடு, பீகார், ஆந்திரா, ஜார்கண்ட், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார்கள். மொத்தத்தில் நெடுந்தூர கல்விக்கு ஒரு மைல் கல்லாக விளங்குகிறது இந்த கல்லூரிகள். சுயநிதி இன்ஜினியரிங் கல்லூரிகளில் பல ஊரகப் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மாணவ, மாணவிகள் வளர்ச்சிக்காக நியாமானகுறைந்த கட்டணத்தில் கல்வி வழங்கி வருகிறார் கேசவ் யாதவ்.  

இராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் கேசவ் யாதவ்:  

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் வயலின் சின்னத்தில் போட்டியிடும் கேசவ் யாதவ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.  

அதாவது, கடல் நீரை நன்னீராக்கி மக்களுக்கு குடிநீராக கொடுக்கும் புதிய திட்டம், உச்சுப்புளி விமான நிலையத்தில் பயணிகள் விமான சேவை, மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு, திருவாடனை மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்துவது, இராமநாதபுரம் மாவட்டத்தில் தொழில் வாய்ப்பு உருவாக்குவது, ஒருங்கிணைந்த சுற்றுலா திட்டத்தை உருவாக்குவது, முதுகுளத்தூரில் வெளிநாடுவாழ் தமிழர்களின் நலனுக்காக அவர்களை தொடர்பு கொள்ளவும், பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணவும் அரசின் உதவி மையம் நவீன முறையில் அமைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கான தீர்வுகளை கொடுக்க முடியும் என்று அந்த தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.  

தற்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் வீடு வீடாக சென்று வயலின் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்  பூர்வாஞ்சல் ஜனதா கட்சி (மதசார்பற்ற) வேட்பாளர் கேசவ் யாதவ்.

தலைப்புச்செய்திகள்