Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆத்மநிர்பர்தா - 2020ம் ஆண்டின் சிறந்த ஹிந்தி வார்த்தை : ஆக்ஸ்போர்டு அமைப்பு அறிவிப்பு!

பிப்ரவரி 03, 2021 05:24

புதுடில்லி:  ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு அகராதி குழுமத்தின் ஆக்ஸ்போர்டு மொழிகள் என்ற அமைப்பு, ஒவ்வோர் ஆண்டும் சிறந்த வார்த்தைகளை தேர்வு செய்து வருகிறது. அதன்படி, ஹிந்தி மொழியில் மிகச் சிறந்த வார்த்தைகளாக, 2017ல், ஆதார்; 2018ல் நாரி சக்தி; 2019ல் சம்விதான் தேர்வு செய்யப்பட்டன.அந்த வகையில், 2020ம் ஆண்டின் மிகச் சிறந்த ஹிந்தி வார்த்தையாக, ஆத்மநிர்பர்தா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, ஆக்ஸ்போர்டு மொழிகள் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறிஉள்ளதாவது: கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்த நிலையில், கடும் பொருளாதார பாதிப்பை சந்தித்த நிலையில், அவற்றில் இருந்து இந்தியா மீண்டுள்ளது. பிரதமர், நரேந்திர மோடி கூறிய, ஆத்மநிர்பர்தா என்ற அந்த வார்த்தை, மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

தலைப்புச்செய்திகள்