Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரை, கன்னியாகுமரியில் நவீன சாலை

பிப்ரவரி 01, 2021 01:27

புதுடெல்லி: பாராளுமன்றத்தில் இன்று 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நாடு முழுவதும் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் ரூ.1.03 லட்சம் கோடியில் புதிய சாலை திட்டங்கள் அமைக்கப்படும். 3,500 கிலோ மீட்டர் சாலை பணிகளுக்காக இது ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கேரளாவை ஒருங்கிணைக்கும் வகையில் சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. மதுரையில் இருந்து கேரளாவின் கொல்லம் வரை நவீன வசதிகளுடன் கூடிய நெடுஞ்சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி-கேரளாவின் பல பகுதிகளை இணைக்க நவீன வசதிகளுடன் கூடிய புதிய சாலை அமைக்கப்படும். மேற்கு வங்காளத்துக்கு 25 ஆயிரம் கோடி ரூபாயும், கேரளாவுக்கு 65 ஆயிரம் கோடி ரூபாயும் சாலை திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நாடு முழுவதும் மேலும் 11,500 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும். இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்