Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.35000 கோடி கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு பட்ஜெட்டில்  ஒதுக்கீடு

பிப்ரவரி 01, 2021 11:39

புதுடெல்லி: பாராளுமன்றத்தில் இன்று 2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியது 6 தூண்கள் என்ற அடிப்படையில் மத்திய பட்ஜெட் அமைக்கப்பட்டுள்ளது. சுயசார்பு இந்தியா திட்டத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளன.

சுகாதார கட்டமைப்புக்கு நிதி ஒதுக்கீடு இந்த பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுயசார்பு சுகாதார திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.64180 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  தற்காப்பு, குணப்படுத்துதல், சரியான சிகிச்சை ஆகிய 3 அம்சங்களில் சுகாதாரத்துறை கவனம் செலுத்துகிறது. இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும்.

கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும். கொரோனாவைக் கட்டுப்படுத்த மேலும் 2 தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும். கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.35000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற தூய்மை திட்டத்திற்கு 1.41 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

தலைப்புச்செய்திகள்