Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அம்மாபேட்டையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

ஜனவரி 30, 2021 01:02

கும்பகோணம்: கும்பகோணம் அருகே பாபநாசம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆலோசனை கூட்டம்  அம்மாபேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பக்கிரிசாமி வாண்டையார் தலைமை தாங்கினார். தெற்கு வட்டார தலைவர் கோபிநாத் வட்டார தலைவர் கண்ணன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர்  முகமதுகனி, பாபநாசம் வட்டார தலைவர் நாகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் செல்வபாரதிகண்ணன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் கலந்து கொண்டு பேசினார். 

வரும் சட்டமன்ற தேர்தலின் போது பாபநாசம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு கேட்டு பெறுவது எனவும், பாபநாசம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கிருஷ்ணசாமி வாண்டையாரை  நிறுத்த வேண்டுமென கட்சி நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தினார்கள் கூட்டத்தில் மாற்று  கட்சியை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் என சுமார்  50க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கடசியில் இணைத்து கொண்டனர். 

தலைப்புச்செய்திகள்