Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிடைத்த உரிமைகள், வசதிகள் குறைக்கப்படவில்லை: ஜனாதிபதி உரை

ஜனவரி 29, 2021 08:54

புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

வேளாண் சட்டங்கள் விஷயத்தில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்கு மத்திய அரசு கட்டுப்படும். வேளாண் சட்டங்கள் தொடர்பான சில முரண்பாடான தகவல்களை நீக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கிறது. 

விரிவான விவாதங்களுக்கு பிறகே பாராளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மூன்று சட்டங்களை உருவாக்குவதற்கு முன்னர் கிடைத்த உரிமைகள் மற்றும் வசதிகள் குறைக்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். உண்மையில் இந்த புதிய வேளாண் சீர்திருத்தங்களுடன் அரசாங்கம் விவசாயிகளுக்கு புதிய வசதிகளையும் உரிமைகளையும் வழங்கியுள்ளது.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலையை உறுதி செய்வதே அரசின் கொள்கை ஆகும். மத்திய அரசு கொண்டு வந்த பயிர் காப்பீட்டு திட்டங்கள் மூலம் சிறு, குறு விவசாயிகள் பெரும் பலன் அடைந்துள்ளனர்.

விவசாயிகள் சமீபத்தில் ஒரு டிராக்டர் பேரணியை நடத்தினர். போராட்டங்களின் போது வன்முறை ஏற்பட்டது மற்றும் செங்கோட்டையில் தேசியக் கொடியை அவமதித்த சம்பவங்கள் நடந்தன. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்