Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சரக்கு வாகனத்தில் குட்கா -  போலீசாரை கண்டதும் வாகனத்தை விட்டு ஓட்டுநர் ஓட்டம்

ஜனவரி 26, 2021 09:38

சென்னை : பீர்க்கன்கரணை அருகே சரக்கு வாகனத்தில் குட்கா கடத்தி சென்ற நபர் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை கண்டதும் வாகனத்தை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.

சென்னை பீர்க்கன்கரணை காவல் நிலைய ரோந்து வாகன போலீசார் முடிச்சூர் மெயின் ரோடு, மதனபுரம் சர்வீஸ் சாலை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது  அவ்வழியாக வந்த டாடா ஏசி  சரக்கு வாகனத்தில் வந்த நபர்கள் காவல் குழுவினரை கண்டதும் சரக்கு வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பியோடினர்.

காவல் குழுவினர் சரக்கு வாகனத்தை சோதனை செய்து பார்த்த பொழுது 1,040 கிலோ எடை கொண்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை உள்ளிட்ட பொருட்கள் இருந்தது. இதனை கண்ட காவல் துறையினர் கடத்தல் செய்யப்பட்ட குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

பீர்க்கன்கரணை காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு மேற்படி குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வந்த சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் உத்திரமேரூரை சேர்ந்த காசி(22), என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளி காசி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

தலைப்புச்செய்திகள்