Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

 மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி

ஜனவரி 25, 2021 12:26

திருநெல்வேலி : பாளையங் கோட்டையில், ஐந்நூற்றுக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்பு மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியினை மாநகர காவல் துணை ஆணையர் துவக்கி வைத்தார்.

திருநெல்வேலி,ஜன.25:--திருநெல்வேலி மாவட்ட சிலம்பாட்டக் கழகம் மற்றும் திருநெல்வேலி சென்ட்ரல் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய, 38-ஆவது மாவட்ட அளவிலான, சிலம்பாட்டப் போட்டி,காலையில் தொடங்கி, இரவு வரையிலும், திருநெல்வேலியில் நடைபெற்றது.

பாளையங்கோட்டை வ.உ.சி.திடல் விளையாட்டு உள்ளரங்கில் வைத்து நடைபெற்ற, இந்தப் போட்டிக்கு, திருநெல்வேலி மாவட்ட சிலம்பாட்டக் கழகத் தலைவர்  மற்றும் திரிடூஒன்டூ (3212) ரோட்டரி மாவட்ட, வருங்கால துணை ஆளுநருமான எஸ்.உலகுராஜ் தலைமை வகித்தார்.

திருநெல்வேலி மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் எஸ்.ராஜேஷ் முன்னிலை வகித்தார். திருநெல்வேலி மாவட்ட, சிலம்பாட்டக் கழகப் பொருளாளரும்,  தேசிய  சிறப்பு நடுவருமான எம்.மாரிமுத்து, அனைவரையும் வரவேற்றுப் பேசினார். திருநெல்வேலி மாநகர காவல் சட்டம் ஒழுங்கு பிரிவு துணை ஆணையர் ச.சரவணன், சிலம்பாட்டப் போட்டிகளைத் துவக்கி வைத்தார்.

ரோட்டரி சங்கங்களின் முன்னாள் துணை ஆளுநரும், தொழில் அதிபதிருமான "மயில்" டி.பாலசுப்பிரமணியன், 3212 ரோட்டரி மாவட்ட,  துணை ஆளுநர் பி.துரைக்குமார், சென்ட்ரல்  ரோட்டரி சங்க ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கே.கிங்ஸ்டன் பால் மற்றும் வழக்கறிஞர் கே.பாலாஜி ஆகியோர், பரிசுகளை வழங்கினர்.

இந்தப் போட்டியில், திருநெல்வேலி மாவட்டம் முழுவதிலும்  இருந்து, மொத்தம் 550 மாணவ, மாணவிகள் பங்கேற்று இருந்தனர். போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக போட்டி இயக்குநர் ஆசான் சிலம்பு ஏ.சுந்தர் செய்திருந்தார்.

திருநெல்வேலி மாவட்ட சிலம்பாட்டக் கழக செயற்குழு உறுப்பினர்கள் டி.கணேசன், எஸ்.கணேஷ்குமார், எஸ்.செந்தில் ஆறுமுகம், ஐ.பாலசுப்பிரமணியன் மற்றும் கே.கண்ணன் ஆகியோர் கூட்டாக நன்றி தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்