Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பத்து ஆண்டு காலமாக நாம் பின்னோக்கி இருண்ட காலத்திற்கு  போய்விட்டோம் - தயாநிதிமாறன்  

ஜனவரி 25, 2021 12:22

திருவாரூர்  : பத்து ஆண்டு காலமாக நாம் பின்னோக்கி இருண்ட காலத்திற்கு  போய்விட்டோம்  என மன்னார்குடி  அருகே  மக்கள் கிராம சபை கூட்டத்தில்  பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின்  விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரச்சார பயணமாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு  உட்பட்ட  பாமணி பகுதியில் உள்ள டான்பெட் உரத்தொழிற்ச்சாலையை பார்வையிட்டு அண்ணா  மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் எடமேலையூர் பகுதி முழுவதும் 500  மரக்கன்றுகளை நடும் பணியை துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து மூவாநல்லூரில் மக்கள் கிராம சபை கூட்டத்தில்  கலந்து கொண்டு பேசினார்.

அப்போது  தமிழகத்தில் புதிய வேலை வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. உங்கள் பிள்ளைகள் படித்து விட்டு பக்கத்தில் நல்ல தொழிற்சாலைகள் அல்லது மாவட்டத்தில் ஒரு பெரிய  தொழிற்சாலையோ ஐடி பூங்கா இருந்திருந்தால் கொரோனா தொற்றால் வீட்டிலிருந்தே வேலை செய்திருக்கலாம்.

பத்து ஆண்டு காலமாக நாம் பின்னோக்கி  இருண்ட காலமாக பின்னோக்கி போய்விட்டோம் என பொதுமக்களின் வேதனையை எடுத்துரைத்தார் அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்  நாராயணசாமி இல்லத்திற்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டுள்ள அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி புகைப்பட கண்காட்சிகளை பார்த்து  ரசித்தனர்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட திமுக  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

தலைப்புச்செய்திகள்