Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒரே கல்வியாண்டில் 3 விருதுகள்: சாதனை படைத்தது வேதாந்தா அகாடமி

ஜனவரி 24, 2021 08:51

சென்னை: சென்னை வானகரத்தில் உள்ள வேதாந்தா அகாடமி பள்ளி கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் 3 விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளது. 

* வேதாந்தா அகாடமி பள்ளியின் தொடர் செயல்பாடுகள், ஆசிரியர்களின் பயிற்றுவிக்கும் முறைகள், ஊரடங்கால் மாணவர்கள் பள்ளிக்கு வரமுடியாத நிலையிலும் கூட மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் கல்வித்திறனை மேம்படுத்த பள்ளி எடுத்த சிறப்பான முயற்சிகள் உள்ளிட்ட பள்ளியின் பல்வேறு செயல்திறன்களையும் பாராட்டி பிரிட்டிஷ் கவுன்சிலின் மதிப்புமிக்க சர்வதேச பள்ளி விருது (ISA) பள்ளிக்கு வழங்கப்பட்டது.

* இந்திய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தினால் (CEGR) மெய்நிகர் 13-வது ராஷ்டிரியசிக்ஷா கௌரவ் புராஸ்கர் விழா கடந்த ஆண்டு. நடத்தப்பட்டது. இந்த விழாவில் சென்னை வேதாந்தா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளிக்கு தமிழகத்தின் அடுத்த தலைமுறைக்கான சிறந்த பள்ளி (Best Next Generation School in Tamil Nadu 2020 Award) என்ற விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

* மாணவர்களின் மனநலன், உடல்நலனைக் கருத்தில் கொண்டு உடற்கல்வியை சிறப்பான முறையில் ஊக்குவித்தது வேதாந்தா அகடாமி. அதற்காக  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பாக FIT இந்தியா விருது பள்ளிக்கு வழங்கப்பட்டது.

இதன் மூலம் ஒரே ஆண்டில் 3 சிறப்பான விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளது வேதாந்தா அகாடமி பள்ளி. இந்த சாதனைக்கு மாணவர்களின் தொடர் முயற்சி, மாணர்களை ஊக்குவித்த அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களின் அயராத உழைப்பே காரணமாக அமைந்துள்ளது என கூறுகிறார் பள்ளியின் நிர்வாகி சந்தீப் வாசு.

தலைப்புச்செய்திகள்