Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஜனவரி 22, 2021 11:51

திருச்சி : மருங்காபுரியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை  அரசு ஊழியர்களாக்கவும், முறையான காலமுறை ஊதியம் வழங்கவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர், திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்திற்கு முன்பு  கோரிக்கைகளை வலியுறுத்து மாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.தமிழ்செல்வியில் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர்  அன்னம்மாள், செயலர் கலா, பொருளர் பங்கஜவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும்,

முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அகவிலைப்படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் போது ஊழியருக்கு ரூ.10  லட்சமும், உதவியாளருக்கு ரூ.5 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும்,

மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அங்கன்வாடி ஊழியர்களை 7-வது ஊதியக்  குழுவில் அரசு ஊழியராக்குவேன் என அளித்த உறுதியினை தமிழக அரசு நிறைவேற்றி தரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஊழியர்கள், உதவியாளர்கள்  ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மருங்காபுரி வட்டாரத்தை சேர்ந்த அன்பரசி, ஆதி, நிர்மலா, ராஜாத்தி, ராஜலட்சுமி  உள்ளிட்ட பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என 240 பேர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்