Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஸ்டாலினுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

ஏப்ரல் 04, 2019 10:08

சென்னை: கோடநாடு விவகாரம் தொடர்ந்து பேசினால், அவதூறு வழக்கிற்கான தடையை நீக்க வேண்டியிருக்கும் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சனம் செய்தனர். இதனையடுத்து ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. இதனை எதிர்த்து ஸ்டாலின் தரப்பில் ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட், அவதூறு வழக்கிற்கு தடை விதித்ததுடன், கோடநாடு விவகாரம் குறித்து பேச தடை விதித்தது. ஆனால், கோடநாடு விவகாரம் குறித்து ஸ்டாலின் தொடர்ந்து பேசி வந்தார். 

இந்நிலையில், கோடநாடு விவகாரம் குறித்து ஸ்டாலின் பேச தடை விதிக்க வேண்டும் எனக்கூறி தமிழக அரசு, சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டாலின் கோடநாடு குறித்து தொடர்ந்து பேசினால், நடவடிக்கை எடுக்கப்படும். ஐகோர்ட் உத்தரவை மீறி தொடர்ந்து பேசுவது ஏன் ? கோடநாடு விவகாரம் பற்றி தொடர்ந்து பேசி வந்தால், அவதூறு வழக்கிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும். தொடர்ந்து பேச விரும்பினால், வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டியிருக்கும். வழக்கு விசாரணைக்கு ஸ்டாலின் தயங்குவது ஏன்? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

தலைப்புச்செய்திகள்