Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமேசானில் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு விற்பனை ஆரம்பம் 

ஜனவரி 20, 2021 11:06

அமேசான் நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு விற்பனையை அறிவித்து இருக்கிறது. அதன்படி, இன்று (புதன் கிழமை) முதல் ஜனவரி 23 ஆம் தேதி வரை இந்த விற்பனை நடைபெற உள்ளது. இந்த விற்பனையை அமேசான் பிரைம் உறுப்பினர்கள் 24 மணி நேரத்துக்கு முன்னதாகவே பெற முடியும்.

ஸ்மார்ட்போன்கள், மின்சாதன பொருட்கள், பேஷன் மற்றும் அத்தியாவசிய அழகு சாதனங்கள், வீடு மற்றும் சமையல் அறை உபகரணங்கள், அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றை பெரிய பிராண்டுகளில் இருந்து பெரிய சேமிப்புகளை இந்த விற்பனை மூலம் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

அந்த வகையில் சிறப்பு விற்பனையாக ஐபோன் 11, ஐபோன் 12 மினி 64 ஜிபி மாடல் விலை ரூ. 59,990 என துவங்குகிறது. இத்துடன் எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ. 4500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஒப்போ பைண்ட் எக்ஸ்2 ஸ்மார்ட்போனிற்கு ரூ. 13 ஆயிரம் சலுகை அறிவிக்கப்பட்டு ரூ. 51,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஐபோன் 11 64 ஜிபி மாடல் ரூ. 48,999 விலையில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் 8டி 5ஜி 12 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 43,499 விலையில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் 8டி 5ஜி 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 40,499 விலையிலும், ஒன்பிளஸ் 7டி ப்ரோ 8 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 38,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று சாம்சங், நோக்கியா மற்றும் ரெட்மி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் சிறப்பு சலுகை மற்றும் அசத்தல் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
 

தலைப்புச்செய்திகள்