Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

ஜனவரி 20, 2021 09:07

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி வெளியிட்டார். வருகின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளிடப்பட்டது.

அனைத்து அரசியல் கட்சியினர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர மானு ரெட்டி ஓசூர், தளி, வேப்பனஹள்ளி, கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய ஆறு சட்டமன்றத்  தொகுதிகளுக்கன இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 8,05,518 ஆண் வாக்காளர்களும், 7,93,220 பெண் வாக்காளர்களும், 280 இதரர் வாக்காளர்கள் என  மொத்தம் 15,99,018 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.  இந்த நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சதிஷ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் உடன் இருந்தனர்.

தலைப்புச்செய்திகள்