Sunday, 28th April 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சை பெரிய கோவிலில் மகர சங்கராந்தி விழா

ஜனவரி 16, 2021 12:42

தஞ்சை : மாட்டுப்பொங்கல் விழாவை ஒட்டி தஞ்சை பெரிய கோவில் அமைந்துள்ள பிரம்மாண்ட நந்தியம்பெருமான் சிலைக்கு காய்கறிகள் இனிப்பு வகைகள் மற்றும் மலர்களை கொண்டு மகர சங்கராந்தி விழா கொண்டாடப்பட்டது.

தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் மாட்டுப்பொங்கல் மற்றும் மகர சங்கராந்தி தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் நந்தியம் பெருமானுக்கு எதிரே 108 பசுக்களுக்கு  கோ பூஜை நடைபெறும்.

மேலும் ஆயிரம் கிலோ எடை அளவுள்ள காய்கறிகள் பழங்கள் இனிப்பு வகைகளைக் கொண்டு நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் ஆண்டுதோறும் செய்யப்படும். இந்த ஆண்டு கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் விதமாகவும் தொடர் மழையின்  காரணமாக நந்தியம்பெருமானுக்கு   குறைந்த அளவிலான பழங்கள் காய்கள் இனிப்புகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

முன்னதாக நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இவ்வருடம் குறைந்த அளவிலான மக்கள் இவ்விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தலைப்புச்செய்திகள்