Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இளவட்டக்கல்லை தூக்கி அசத்திய பெண்கள் - இன்பதுரை எம்.எல்.ஏ. பரிசு வழங்கி பாராட்டு

ஜனவரி 16, 2021 11:41

திருநெல்வேலி: திருநெல்வேலி வடலி விளையில் பொங்கல்  விளையாட்டு போட்டியில் பாரம்பரிய  இளவட்டக்கல்லை தூக்கி அசத்திய ஆண்கள் மற்றும் பெண்களை  இன்பதுரை எம்.எல்.ஏ. பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, திருநெல்வேலி மாவட்டம், பணகுடியை அடுத்துள்ள, வடலிவிளை கிராமத்தில், பாரம்பரிய  இளவட்டக்கல் தூக்கும் போட்டிகள் நடைபெற்றன. சிறார்கள், ஆண்கள், பெண்கள் ஆகியோருக்கு வயது அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றது.  

90 கிலோ எடைகொண்ட, இளவட்டக்கல்லை தூக்கி, அதனை அப்படியே, கழுத்தின் பக்கத்தில் கொண்டு சென்று, 12 முறைகள் கழுத்தை சுற்றி வலம் வரச்செய்து, சாகசம் செய்திடும் போட்டி, 129 கிலோ எடைகொண்ட இளவட்டக்கல்லை, ஒரே மூச்சில்  தூக்கிடும் போட்டி, 45 கிலோ இளவட்டக்கல்லை, ஒரே மூச்சில் தூக்கிடும்  போட்டி ஆகியன, ஆண்களுக்கும், பெண்களுக்கும் என, தனித்தனியாக நடைபெற்றன. 

இதில் தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவரும், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான ஐ.எஸ். இன்பதுரை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பரிசுகள் வழங்கி, அனைவரையும் பாராட்டினார். மேலும், ஒவ்வொரு போட்டியிலும், முதல் இடம் பெற்ற அனைவருக்கும், தன்னுடைய சொந்த நிதியில் இருந்து, ஸ்மார்ட் போன் மற்றும் ஐந்தாயிரம் ரொக்க பணமும் வழங்கினார்.

விழாவில், பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது, தமிழ் திரைப்பட நடிகர் வின்ஸ்லி மற்றும் வடலிவிளை ஊர் பிரமுகர்கள் உட்பட  திரளானோர்  கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்