Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகம் வெற்றிநடை போடவில்லை என கூறுவதில் அர்த்தமில்லை - அமைச்சர் பாண்டியராஜன்

ஜனவரி 12, 2021 12:06

சென்னை : திரைப்படம் வெளியாகவில்லையெனில்  லண்டன் போவேன் என சொன்னவர் தமிழகம் வெற்றிநடை போடவில்லை என கூறுவதில் அர்த்தமில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டியளித்தார்.

சென்னை அடுத்த திருநின்றவூர் தனியார் ஜெயா கலைக்கல்லூரியில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பாக ஒரு நாள் இலவச வேலைவாய்ப்பு முகாம்  நடைபெற்றது.

இதில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வேலைவாய்ப்பு இயக்குனர் வீரராகவ ராவ் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி  முகாமை தொடங்கி வைத்தனர்.  இந்த வேலைவாய்ப்பு முகாமில்   இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான  அசோக் லேலண்ட், டிவிஎஸ், ராணி, பிரேக் போன்ற உற்பத்தித் தொழிற்சாலை நிறுவனங்கள் உள்பட 150 க்கும் அதிகமான  நிறுவனங்கள் முகாமில் பங்கேற்றன.

இந்த முகாமில்  பங்கேற்ற சுமார் 700 க்கும் அதிகமானோருக்கு உடனடி பணியானைகளையும், 300கும் அதிகமானோருக்கு அடுத்தகட்ட நேர்முக தேர்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் 5000 க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதில் பங்கேற்று தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா  பாண்டியராஜன் பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்  கமல் தன் திரைப்படம் வெளியாகவில்லை என்றால் லண்டன் சென்றுவிடுவேன் என  கூறியவர் தமிழகம் வெற்றிநடை போடவில்லை என கூறுவதில் அர்த்தமில்லை என்றார்.

சகோதரர் கமல் இருட்டையே பார்க்காமல் வெளிச்சத்தையும் பார்க்க வேண்டும் தொடர்ந்து நெகட்டிவாக  அரசியல் செய்தால் மக்களால்  அவர் நெகட்டிவ் அரசியல்வாதியாக பார்க்கப்படுவார் என குற்றம்சாட்டினார்.  தொடர்ந்து பேசியவர் நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது அவர் விருப்பம் அவர் எம்ஜிஆர் ஆட்சியை தருவேன் என கூறினார் அரசியல் வரவில்லை என கூறியுள்ளார்

ஆனால் அவர்  அதிமுகவிற்குதான் குரல் கொடுக்க வேண்டும் குரல் கொடுப்பார் என கேட்டுக்கொண்டார். முதல்வர் வேட்பாளர் தேர்வை தேமுதிக ஏற்கும் என்ற பிரேமலதாவின் கருத்துக்கு வரவேற்பு  அளிப்பதாக அமைச்சர் தெரிவித்தார் மேலும் வரும் பொங்கலுக்கு பின்னர் 12 இடங்களில் அகழ்வாராய்ச்சி துவங்க அதிகாரிகள் தயாராக உள்ளனர் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும் என  உறுத்தியளித்துள்ளார். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 7000 அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்