Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிராமப்புற காவலர் திட்டம் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நடைபெற்றது

ஜனவரி 10, 2021 12:39

ராமநாதபுரம் : பரமக்குடி அருகே கிராமப்புற காவலர் திட்டம் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்  தென் மண்டல ஐஜி முருகன் தலைமையில் நடைபெற்றது
பரமக்குடி அருகே உள்ள மேலப்பெருங்கரை கிராமத்தில் கிராமப்புற காவலர் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் தென்மண்டல ஐஜி முருகன் தலைமையில் நடைபெற்றது.

 இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்முறையாக மேலப்பெருங்கரை கிராமம் தாய்  கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டு மேலப்பெருங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட கீழப்பெருங்கரை, ராஜாக்கள்பட்டி,திருவரங்கி, பாப்பனேந்தல்,பாலபச்சேரி ஆகிய கிராமங்களில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் புகார்களை தெரிவிக்க கிராமங்களில் உதவி காவலர் கணேசன் என்பவர் நியமிக்கப்பட்டார். 

நிகழ்ச்சி பற்றிய தென்மண்டல ஐஜி முருகன் கூறியதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுவாக அதிக குற்ற சம்பவங்கள் நடைபெறும் மாவட்டம் குறிப்பாக கிராமப்புறங்களில் அதிகமாக சம்பவங்கள் நடைபெறும். அதனை கிராமப்புற மக்கள் காவல் நிலையங்களில் தெரிவிக்க பயப்படுவார்கள் அவர்களின் பயங்களை போக்குவதற்காகவே இந்த திட்டம் துவங்கப்பட்டது.

அது முதன் முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலப்பெருங்கரை கிராமத்தில் முதற்கட்டமாக துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கிராமத்தில் உதவி காவலர் கணேசன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.  அவரின் வாட்ஸ்அப் மூலம் வாட்ஸ் அப் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மக்கள் புகார்களை தயங்காமல் தெரிவிக்கலாம். மக்களின் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி மக்களுக்கு எடுத்துரைத்தார். 

பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் கூறியதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக மேலப்பெருங்கரை கிராமத்தில்  இத்திட்டம்   முதற்கட்டமாக துவங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 427 கிராமங்களில் செயல்பட இருக்கிறது இதன் மூலம் மக்கள் புகார்களை தெரிவிக்க எதுவாக இருக்கும் என்று கூறினார்.

தலைப்புச்செய்திகள்