Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சியில் பொதுமக்கள் தவறவிட்ட 22 லட்சம் மதிப்புள்ள  165 செல்போன்கள் மீட்பு - உரியவரிடம் சேர்த்த காவல்துறையினர்

ஜனவரி 10, 2021 10:30

திருச்சி : பொதுமக்கள்  பல்வேறு திருவிழாக்கள், வெளியூர்  பயணங்களின் போதும் தவற விட்ட செல்போன்கள் குறித்து ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் மற்றும் வாட்ஸ்அப் மூலமும்  புகார்கள் காவல்துறையினருக்கு பெறப்பட்டு வந்தது. இந்நிலையில் காவல்துறை ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் மற்றும் கோட்டை,  கன்டோன்மென்ட் காவல் நிலையத்தை சேர்த்து ஒருவர் என அதிகாரிகள் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டது.

தொடர்ந்து அக்குழுவினர்  தவறவிட்டவர்களிடம்  செல்போனின்  IMEI  நம்பர் பெறப்பட்டு அந்த நம்பர்கள் மூலம் சுமார் 22லட்சத்து 85ஆயிரத்து 140ரூபாய் மதிப்புள்ள 165 செல்போன்கள்  கண்டறியப்பட்டு அவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. உரியவர்களிடம் செல்போன்களை திருப்பி கொடுக்கும் இந்த நிகழ்ச்சி திருச்சி மாநகர ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் திருச்சி சட்டம் ஒழுங்கு காவல்துறை துணை ஆணையர் பவன்குமார், குற்றம் மற்றும் போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் வேதரத்தினம், கூடுதல் 
துணை ஆணையர் ரமேஷ்பாபு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு உதவி ஆணையர் சின்னச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பறிமுதல் செய்யப்பட்டதில்  12செல்போன்கள் தொடர்பாக திருட்டு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால்  முடிந்தவுடன் உரியவர்களிடம் கொண்டு ஒப்படைக்கப்படும்  என  காவல்துறை ஆணையர் லோகநாதன் தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்