Wednesday, 5th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இலங்கை அகதிகள் குடும்பத்திற்கும் ரூ.2500 மற்றும் பொங்கல் பரிசு

ஜனவரி 08, 2021 10:27

திருநெல்வேலி : இலங்கை  அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கும் 2 ஆயிரத்து 500 ரூபாயுடன், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது  திருநெல்வேலி மாவட்டத்தில், கோபாலசமுத்திரம், சமூகரெங்கபுரம், தாழையூத்து மற்றும் பெருமாள்புரம் உட்பட மொத்தம் 6 இடங்களில், இலங்கை அகதிகள் முகாம்கள்  ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த முகாம்களில் வசித்து வரும், குடும்ப அட்டைதாரர்களுக்கும், பொங்கல் பணம் மற்றும்  பரிசுகளை  வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாநகராட்சிக்கு

உட்பட்ட, பெருமாள்புரம் பகுதியில் அமைந்துள்ள, இலங்கை அகதிகள் முகாமில், மொத்தம் 48 குடும்ப அட்டைதாரர்களுக்கு, திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டல, முன்னாள்

தலைவரும், நெல்லை கூட்டுறவு பண்டக சாலையின் தலைவருமான எம்.சி.ராஜன், 2 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் பச்சரிசி, சர்க்கரை, உலர் திராட்சை, ஏலக்காய், கிராம்பு, கரும்பு

அடங்கிய, பொங்கல் பரிசு தொகுப்பு ஆகியவற்றை வழங்கி, அனைவருக்கும், பொங்கல் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.  இந்நிகழ்ச்சியில், நெல்லை கூட்டுறவுபண்டகசாலை  இயக்குநர் பேச்சிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்