Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பறவைக்காய்ச்சல் அச்சம் தேவை இல்லை - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தகவல் 

ஜனவரி 08, 2021 08:58

கன்னியாகுமரி: பறவைகாய்ச்சல் கேரளாவில் பரவி வரும் நிலையில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் எம்.அரவிந்த் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 மருத்துவமனைகளில் இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நாகர்கோவிலில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் எம் அரவிந்த் துவங்கிவைத்தார். முதற்கட்டமாக மாவட்டத்தில் 20 ஆயிரம் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

பறவைகாய்ச்சல் கேரளாவில் பரவி வருகிறது.  இதுவரை குமரி மாவட்டத்தில் இந்த நோய் கண்டறியப்படவில்லை என்றார். பறவை கைச்சரல் மறவாமல் இருக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவே  பொதுமக்கள் அச்சப்பட 
தேவையிலை என தெரிவித்தார்.

மேலும் பறவைகள் வளர்ப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் பறவைகள் அதிக அளவில் இருந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு  தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், அதன் மூலம் இந்த காய்ச்சல் பரவுவதை உடனடியாக நாம் தடுத்து நிறுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்