Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கால்வாய் ஓட்டைக்குள் சிக்கிய முதியவரின் கால் - போராட்டத்திற்கு பின் மீட்பு 

ஜனவரி 07, 2021 09:35

சென்னை  :பூவிருந்தவல்லி அருகே நசரத்பேட்டையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரம் நடந்து சென்றவர்  மழை நீர் கால்வாயில் விழுந்து கால் சிக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை பூவிருந்தவல்லி அருகே நசரத்பேட்டையில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்  அமைக்கப்பட்டு இருந்த மழை நீர் வடிகால் மூடப்பட்டு நடைப்பாதை போன்று காட்சியளித்தது. நாளடைவில் மழை நீர் கால்வாயில் மூடப்பட்டு இருந்த சிமெண்ட் மூடிகள் அகற்றப்பட்டு திறந்த நிலையில் கிடந்தது

. இந்த நிலையில் இரவு மழை சாரல் பெய்து வந்த நிலையில் சாலையோரமுள்ள நடைபாதை மீது 40 வயது மதிக்கதக்க ஒருவர் நடந்து சென்றுள்ளார்.  அப்போது கால்வாய் சரியாக மூடப்படததால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது  வலது கால் கால்வாய் ஓட்டைக்குள் சிக்கியது. 


இதனால் அவரால்  காலை வெளியே எடுக்க முடியவில்லை. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களால் சிமெண்ட் மூடியை உடைத்து அவரை மீட்டனர்.  ஏற்கனவே கடந்த மாதம் மதுரவாயல் அருகே திறந்த கிடந்த கால்வாயில் விழுந்து தாய், மகள் உயிர் இழந்த நிலையிலும் தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம்  விழிப்புணர்வு அடையவில்லை  என்றும் ,

சென்னை-பெங்களூர்தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக இருப்பதாக நீதிமன்றம் தாமாக முன் வந்து சாலையை செப்பனிடவும் அதுவரை சுங்கச்சாவடியில் பாதி கட்டணம்  வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் கால்வாய்கள் மூடப்பட்டு இருக்கிறாதா என்பதையும் சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்