Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருநெல்வேலியில் பாதாளசாக்கடை உந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு 

ஜனவரி 07, 2021 09:33

திருநெல்வேலி  : மாநகராட்சி தியாகராஜ நகரில் பாதாள சாக்கடை உந்து நிலையம் அமைப்பதற்கு தெரிவித்து   குடியிருப்பு மக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய விரிவாக்கப்பகுதிகளில் ஒன்றான,  தியாகராஜநகர் குமரேசன் நகர் பகுதியில், மாநகராட்சி சார்பில், பாதாள சாக்கடை உந்து நிலையம்   
அமைப்பதற்கான,  இடம் தேர்வு செய்யப்பட்டு,  அதற்கான பணிகளும் துவக்கப்பட்டு, அவை அனைத்தும் தற்பொழுது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

 
இந்தப் பகுதியில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு  உந்து நிலையம் அமைக்கப்படுமேயானால், பாதாள சாக்கடையின்,  கழிவு நீரானது,  நிலத்தடி நீருடன் கலந்து,  நிலத்தடி நீர் அசுத்தமாகி விடுவதுடன் என்றும், கடுமையான சுகாதாரக்கேடு ஏற்பட்டு இங்குள்ள மக்கள் எவரும், நிலத்தடி நீரைப் பயன்படுத்த முடியாமலும் போய்விடும் எனக்கூறி,

அந்த  பகுதியில் வசித்து வரும் மக்கள் அனைவரும், உந்து நிலையப்பணிகள் நடைபெற்று வரும் இடத்திற்கு முன்பாக, தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவித சம்பவங்கள், எதுவும் நிகழ்ந்து விடாத வகையில், அங்கு  போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

தலைப்புச்செய்திகள்