Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருநெல்வேலியில் திமுக சார்பில் மக்கள் சபைக்கூட்டம் 

ஜனவரி 06, 2021 11:50

திருநெல்வேலி : தி.மு.க.சார்பில் நடைபெற்ற மக்கள் சபை கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன், திருநெல்வேலி  நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம்  பங்கேற்று, மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.


தி.மு.க.வின் விடியலை நோக்கி, ஸ்டாலினின் குரல் என்னும் திட்டத்தின் கீழ்,  திருநெல்வேலி சட்டமன்றத்          தொகுதிக்கு உட்பட்ட,   தச்சநல்லூர் பகுதியில், அதிமுகவை நிராகரிக்கிறோம்  என்னும் தலைப்பிலான, கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.மாலைராஜா தலைமை வகித்தார்.

தச்சநல்லூர் பகுதி தி.மு.க. செயலாளர்  சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். திருநெல்வேலி  நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, இந்தக் கூட்டத்தில், தச்சநல்லூர், உடையான் குடியிருப்பு, சத்திரம் 
புதுக்குளம், மதகடி, பஜனை மடம் தெரு, பவுண்ட் தெரு, தேனீர்குளம் தெரு ஆகிய  பகுதிகளைச் சேர்ந்த,  3 ஆயிரத்து  மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். 


கூட்டத் துவக்கத்தில், மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, தி.மு.க.முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு, நாடாளுமன்ற  உறுப்பினர் ஞானதிரவியம் உட்பட பலர்,  மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தி.மு.க. தலைமைக்கழகம் சார்பில், தமிழக ஆளுநரிடம்  அளிக்கப்பட்ட, அ.தி.மு.க. அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை" யின், நகல்கள் அச்சிடப்பட்ட, துண்டுப பிரசுரங்கள், இந்த கிராமசபை கூட்டத்தில், விநியோகிக்கப்பட்டன. மாவட்டத் துணைச்செயலாளர் ஆ.க. மணி, கிராமசபை கூட்டத்தைத்  துவக்கி வைத்தார்.


கூட்டத்தில் பேசிய, தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும், தங்களுடைய உரையில், தி.மு.க.ஆட்சி காலங்களில்,  திருநெல்வேலி மாவட்டத்திற்கும், மாநகரத்திற்கும், நிறைவேற்றப்பட்ட  திட்டங்களைப் பற்றியும், தற்போது அ.தி.மு.க.ஆட்சியில், கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களைப் பற்றியும், மக்களிடம் விளக்கிக் கூறினர்.  நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் பேசும் போது, தமிழ்நாட்டில் நடைபெற்று வரும், அ.தி.மு.க. ஆட்சியினை, அகற்றிட வேண்டும் என்னும் நோக்கத்தில், பெண்கள் பெருந்திரளாக, இங்கு  கூடியிருப்பது,  மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த கிராமசபை கூட்டத்தின் மூலம், ஒவ்வொருவரிடம் இருந்தும் பெறப்பட்ட, கோரிக்கை மனுக்கள், விரைவில் மலர இருக்கும், தி.மு.க.ஆட்சியில், பரிசீலித்து, நிறைவேற்றித் தரப்படும் என்று உறுதி அளித்தார்
தொடர்ந்து பேசிய அவர்,  தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், இதுவரையிலும், தமிழகத்தில்,  16 ஆயிரம் இடங்களில்,  மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

 
இன்னும்,  அதிக அளவில், கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று குறிப்பிட்டதுடன், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு குறைகளையும், சுட்டிக்காட்டினார். கூட்டத்தில், தி.மு.க.வின், மாவட்டப பொருளாளர் அருண்குமார், மானூர் ஒன்றியச்செயலாளர் அருள்மணி,  பகுதிச்செயலாளர்கள் பாளையங்கோட்டை பூக்கடை அண்ணாதுரை, மேலப்பாளையம் வி.எஸ். அப்துல் கையூம் உட்பட, நிர்வாகிகள் பலரும், கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்