Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு - அமைச்சர் பெஞ்சமின் பெருமிதம்

ஜனவரி 03, 2021 10:34

   சென்னை  : இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இல்லாத அளவு தமிழகத்தில் 49 சதவீத மாணவர்கள் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரி படிப்பிற்கு செல்வதாக ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.

சென்னை  போருரில்  உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் கலந்து கொண்டு 678 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்.
 
பின்னர் பேசிய அமைச்சர் பெஞ்சமின் தமிழகம் நல் ஆளுமை மிக்க மாநிலமாகவும், தமிழக  முதல்வர் எடப்பாடி ஆளுமை மிக்க முதல்வர் என பிரதமர் சான்று வழங்கி கவுரவித்துள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளும் எந்தவொரு வித்தியாசம் இல்லாமல் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் அரசு பள்ளியில் தேர்ச்சி விகிதம், சேர்ப்பு விகிதம் அதிகரித்து வருகிறது.

 ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி கொண்டு வந்த அரசு அதிமுக அரசு தான் என தெரிவித்தார். மேலும், மருத்துவப் படிப்பிற்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு 300 மாணவர்கள் மருத்துவ சேர்க்கையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இரண்டாவது கவுன்சிலில் இன்னும் அதிகமான மாணவர்கள் மருத்துவ சேர்க்கையில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்

தலைப்புச்செய்திகள்