Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கழிவுநீர் தொட்டியில் விழுந்த மாடு - காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள் 

ஜனவரி 03, 2021 10:24

பெரம்பலூர்: பாடாலூர் பகுதியில் உள்ள கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்த மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பாடாலூரில் பயன்பாட்டில்லாத காவலர் குடியிருப்பு வளாகம் உள்ளது. அதனருகே  ஆணையப்பன் என்பவரது பசு மாடு மேய்ச்சலுக்கு சென்ற போது திறந்த வெளியில் உள்ள 4 அடி செப்டிங் டேங்கில் எதிர் பாராத விதமாக விழுந்தது. 

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் தீயணைப்பு துறையினர் செப்டிங் டேங்கில் தவறி விழுந்த பசு மாட்டை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டனர்.

மேலும் கால் நடை வளர்ப்பவர்களுக்கு மேய்ச்சலின்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. உயிருடன் பசு மாட்டை மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் மற்றும்  சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்