Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ரெடி: கமல்

டிசம்பர் 28, 2020 09:29

திருச்சி: லஞ்ச பட்டியலை வெளியிட்ட கமல்ஹாசன் விரைவில் அமைச்சர்கள் குறித்த ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்ததுடன் தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக நாங்கள் இருப்பது தவிர்க்க முடியாது என்றும் தெரிவித்தார்.

மூன்றாம் கட்ட பிரச்சாரத்தை  திருச்சியில் துவக்கிய மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தற்போது திருச்சி டி.வி.எஸ் டோல்கேட்டில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்,அப்போது பேசிய அவர், தமிழக அரசியலில் நாங்கள் மூன்றாவது அணியாக இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஊழல் இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது தொட்டில் முதல் சுடுகாடு வரை தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மூன்றாவது அணி அம்சமாக நாங்கள் இருக்கிறோம் - மக்கள் நீதி மையத்தின் சாதனைகள் நேர்மை ஒன்றுதான் என்றும், பிஜேபி அரசியலில் மதவாதம் இல்லை என்று சொல்லவே முடியாது என்றும் கூறினார். 

பெண்களுக்கான இட ஒதுக்கீடு 50 சதவீதம் வேண்டும். வீடு நன்றாக இருக்க பெண்கள் காரணம். நாடு நன்றாக இருக்க பெண்கள் தேவை. விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்களுக்கு பங்களிப்பு வேண்டும்.விவசாயத்திலும் பெண்கள் பங்களிப்பு வேண்டும். 
லஞ்சத்தின் ரேட் கார்டே உள்ளது என்றும் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொவன்றிற்கும் தனித்தனி லஞ்சம் வாங்கப்படுவதாகவும், மருத்துவமனைகளில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு 300ரூபாயும், ஆண் குழந்தைகளுக்கு 500ரூபாயும் என அதில் தொடங்குகிறது லஞ்சம்என்றும் அவர் தெரிவித்தார். 

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என்பது எங்கள் தேர்தல் வாக்குறுதி. இரட்டை இலை சின்னத்திற்கு கெட்ட பெயர் விளைவிப்பது வேறு யாரும் அல்ல - முழுக்க முழுக்க இப்போது ஆட்சியில் இருப்பர்கள் தான் என்றும் கூறிய கமல்ஹாசன் 
மதுரையை மற்றொரு தலை நகராக ஆக்குவேன் என கூறியது குறித்து கேட்டதற்கு எல்லா நகரத்தையுமே நாங்கள் தலை நகரம் என்கிற அளவில் கொண்டு வர வேண்டும் என்று தான் நாங்கள் ஆவல் கொள்கிறோம் என்றார். 

சாதி ரீதியான கணக்கெடுப்பு குறித்த கேள்விக்கு,  உடனே இதை மாற்ற முடியாது இட ஒதுக்கீடு கண்டிப்பாக அவசியம் தான் என்றார். மக்கள் நீதி மய்யமும் கூட திராவிட கட்சி தான். கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்போம். இந்தப் பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்கு பிறகு லஞ்சம் பட்டியலை வெளியிட்ட கமல்ஹாசன்,அடுத்ததாக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் விரைவில் வெளிவரும் என்றும் தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்