Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான்: ரவீந்திரநாத்

டிசம்பர் 27, 2020 09:42

கும்பகோணம்: கும்பகோணம் அருகே சுவாமிமலை அறுபடைவீடுகளில் நான்காம் படைவீடான  சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத். சாமி தரிசனம் செய்துவிட்டு தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவிற்கு பின்பு ஒரு சாமானிய தொண்டர்கள் ஆட்சியும், கட்சியும், காப்பாற்றி வருவது என்பது இந்த இயக்கத்தில் மட்டும்தான் சாத்தியப்படும். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். 

மேலும் திடீர் தரிசனத்திற்கு என்ன காரணம் என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கடந்த ஓராண்டு காலமாக கொரோனா வைரஸ் பிடியில் உள்ள தமிழக மக்கள் மீண்டும் புத்துணர்வு பெற்று எழுச்சி அடைய வேண்டும் என்பதற்காக இன்று தரிசனம் செய்ய சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவிலுக்கு வந்ததாக கூறினார். 

அதனைத்தொடர்ந்து அங்காடியில் ரேஷன் கடைகளில் தற்போது அமைக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்குவது மிகுந்த தாமதம் ஏற்படுவதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும், எங்களது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று நாங்கள் ஒருமனதாக முடிவு எடுத்துள்ளதாக கூறினார். 

அவருடன் கும்பகோணம் ஒன்றிய செயலாளர்கள் சோழபுரம் அறிவழகன், என் ஆர்விஎஸ் செந்தில், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், சுவாமிமலை பேரூர் செயலாளர் ரங்கராஜன், உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

தலைப்புச்செய்திகள்