Wednesday, 5th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சியில் விவசாயிகள் தரையில் படுத்து போராட்டம் 

டிசம்பர் 23, 2020 01:57

திருச்சி: அண்ணா சிலை அருகே வேளாண் சட்டத்தை திரும்பப் பெற கோரி   விவசாயிகள் தரையில் படுத்து  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு அறிவித்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக  திருச்சியில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின்  சார்பாக அண்ணாசிலை அருகில்   உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. 

விவசாயிகள் போராட்டத்திற்கு வந்த போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி போராட்டத்திற்கு அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்னர் தாமதமாக  உண்ணாவிரத போராட்டம் துவங்கியது.

அப்போது விவசாயிகள்  தரையில் படுத்து கொண்டு மத்திய அரசு உடனே வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷமிட்டனர்.  

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் தனபாலன் தலைமையில்  நடைபெற்ற இந்த போராட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் செல்லமுத்து, கோத்தாரி கரும்பு சங்க தலைவர் ராமமூர்த்தி, தமிழ் மொழி காவிரி குண்டாறு இணைப்பு நீர் பாசன விவசாய சங்க நிர்வாகி மிசா மாரிமுத்து உட்பட 200க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்