Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஈரோட்டில் வரும் பிப்ரவரி மாதம் அரசியல் எழுச்சி மாநாடு நடத்துவதாக தீர்மானம் .

டிசம்பர் 19, 2020 11:23

ஈரோடு :பிப்ரவரி மாதம் அரசியல் எழுச்சி மாநாடு நடத்துவது என அருந்ததியர் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

அருந்ததியர் கூட்டமைப்பு மற்றும் அருந்ததியர் இயக்கங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. அருந்ததியர் இளைஞர் பேரவை மாநில தலைவர் வடிவேல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆதிதமிழர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் கல்யாணசுந்தரம், தமிழ்நாடு அருந்ததியர் சங்க தலைவர் ராஜேந்திரன், அருந்ததியர் விடுதலை முன்னணி நிறுவன தலைவர் நடராஜ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இதனைத்தொடர்ந்து இந்த கூட்டத்தில் பட்டியலின மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையைக் கொண்ட அருந்ததியர் சமுதாயத்திற்கு கல்வி வேலை வாய்ப்பில் 6 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அரச்சலூர் அருகே  நல்லமங்கல பாளையம் கிராமத்தில் நினைவு சின்னமும் மணிமண்டபமும் ஒரு கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு அமைக்க வேண்டும், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு சிவகங்கையில் தனியாக மணிமண்டபம் அமைக்க வேண்டும் அருந்ததியர் நல வாரியம் அமைக்க வேண்டும்.

 ஆதிதிராவிடர் நலத்துறை என்பதை சமூக நீதித்துறை என்று மாற்றம் செய்து அறிவிக்க வேண்டும் அருந்ததியர் சமூக மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் அருந்ததியர் எழுச்சி மாநாடு வருகிற பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி நடத்துவதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தலைப்புச்செய்திகள்