Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பேராவூரணி அருகே எண்ணெய் இயற்கை எரிவாயு நிறுவன அதிகாரிகள் ஆய்வு 

ஜனவரி 26, 2019 12:22

தஞ்சாவுய்ர்: தஞ்சை மாவட்டம், பேராவூரணியை அடுத்த வலப்பிரமன்காடு கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக தண்ணீர் பொங்கி வரும் கிணற்றில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவன அதிகாரிகள் ஆய்வு வட்டாட்சியர் முன்னிலையில் ஆய்வு நடத்தினர். 

வலப்பிரமன்காடு சிங்காரம் என்பவர் வயலில் கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட, 40 அடி ஆழமுள்ள விவசாயக் கிணற்றில் இருந்து கடந்த ஒரு மாதமாக தண்ணீர் பொங்கி வருகிறது. ஆனாலும் 37 அடி தண்ணீர் நிறைந்து இருக்கும் கிணற்றில் இருந்து தண்ணீர் வெளியேறவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். 

இதுகுறித்து பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் அளித்த தகவலின் பேரில் தஞ்சை ஆட்சியர் ஆ.அண்ணாதுரை புதன்கிழமை அன்று கிணற்றை பார்வையிட்ட பின், புவியியல் மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகளை ஆய்வு நடத்த உத்தரவிட்டார். 

இதையடுத்து வியாழக்கிழமை அன்று பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் முன்னிலையில் காரைக்காலில் இருந்து வந்திருந்த ஜெய்கணேஎன்றார் பவர் தலைமையிலான 3 பேர் கொண்ட எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவன அதிகாரிகள் நேரில் கிணற்றை பார்வையிட்டு நவீன கருவிகளைக் கொண்டு ஆய்வு நடத்தினர். 

பின்னர் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், '' பொதுமக்கள் இதுகுறித்து பயப்படத் தேவையில்லை. கிணற்று நீரில் எரிபொருள் தொடர்பான மூலக் காரணிகள் ஏதும் கண்டறியப்படவில்லை. வேறு ஏதேனும் காரணங்களாக என்பது குறித்து, கிணற்றில் உள்ள 37 அடி தண்ணீரை வெளியேற்றினால், தான் தெரியவரும். எனவே விரைவில் தண்ணீரை வெளியேற்றி விட்டு நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்ய உள்ளோம். இன்னும் ஓரிரு வாரங்களில் இதற்கான பணிகள் தொடங்க உள்ளனர்'' என்றார்.

ஆனால் இன்று அந்த பகுதிகளில் சுமார் 3 விவசாய கிணறுகளில் இது போன்று தண்ணீர் பொங்கி வருவது தெரியவந்தது. இதனால் இது சாதாரணமான் நிகழ்வா, அல்லது பூமிக் அடியில் ஏற்பட்டுள்ள இயற்கை மாற்றமா என பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்