Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் தடுப்பூசி செலுத்திய பிறகு பாதகமான முடிவுகள் வரலாம் - பீதியை கிளப்பும் மத்திய சுகாதாரத்துறை

டிசம்பர் 16, 2020 09:16

சென்னை: இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு பாதகமான முடிவுகள் வர வாய்ப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு பாதகமான முடிவுகள் வர வாய்ப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முந்தைய காலங்களில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகளால் பக்க விளைவுகள் ஏற்பட்டு உள்ளதாகவும், மாநில அரசுகள் இதற்கு தயாராக இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதுகுறித்து மத்திய அரசின் சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷண்  கூறியதாவது:-

கொரோனாவுக்கான தடுப்பு மருந்துகளை வைக்க 41 ஆயிரம் குளிர்பதன சாதனங்கள், 45 ஆயிரம் ஐஸ் மூலம் பதப்படுத்தும் குளிர்பதனப் பெட்டிகள், உள்ளிட்ட சாதனங்கள் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி இயக்கத்திற்கு 23 துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தடுப்பூசி போட்ட பிறகு ஏற்படும் பாதகமான நிகழ்வுகள் ஒரு முக்கியமான பிரச்சினை. உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தை நாங்கள் மேற்கொள்ளும்போது, இது பல தசாப்தங்களாக நடைபெற்று வந்துள்ளது. தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களிடம் சில பாதகமான விளைவுகள் காணப்படுகின்றன.

மருந்தை குளிர் பதனிட செய்வதற்கான வழிகாட்டல்கள் அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி மருந்துகளை குளிர்ச்சியான இடத்தில் வைத்து பாதுகாத்து பயன்படுத்துவதற்கான முறைகளை மாநில அரசுகளுடன் மத்திய அரசு பகிர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்