Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரஜினி பெயரில் பதிவு செய்யப்பட்ட கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு

டிசம்பர் 15, 2020 05:47

சென்னை: தேர்தல் ஆணையத்தில் ரஜினி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், மக்கள் நீதி மையம், நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் கடந்த தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தையே வரும் சட்டமன்ற தேர்தலிலும் ஒதுக்க வேண்டும் என் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அமமுகவிற்கு குக்கர் சின்னமும், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு அவர்கள் விரும்பிய டார்ச்லைட் சின்னம் தமிழகத்தில் ஒதுக்கப்படவில்லை. டார்ச்லைட்டை முன்னிறுத்தி தீவிர பிரச்சாரத்தில் கமல்ஹாசன் ஈடுபட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தை நாட மக்கள் நீதி மையம் ஆலோசித்து வருகிறது.

கடந்த இடைத்தேர்தல், மற்றும் நாடாளுமன்றத் தேர்தலின்போது, தாங்கள் இதற்கு முன்னர் வெற்றிபெற்ற குக்கர் மற்றும் முரசு சின்னத்தை ஒதுக்க கோரி டிடிவி தினகரன் மற்றும் தேமுதிக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணைக்குப் பிறகு அதே சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், ரஜினிகாந்த் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்