Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வனிதா, பீட்டர் பால் ஆஜராக வேண்டும் -நீதிமன்றம் உத்தரவு

டிசம்பர் 12, 2020 08:23

சென்னை: பீட்டர்பாலின் முதல் மனைவி தொடர்ந்த வழக்கில், நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் ஆகியோர் நேரில் ஆஜராகும்படி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம், நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தன்னுடனான திருமணம் ரத்து செய்யப்படாத நிலையில் வனிதா விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டது குற்றம் எனக் கூறி, வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், ஹெலன் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், கணவர் பீட்டர்பால் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும், வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார். 

இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், புகார்தாரரான ஹெலனுக்கும், பீட்டர் பாலுக்கும் திருமணம் நடந்திருக்கிறது என்பதற்கும், அந்த திருமணம் ரத்தாகவில்லை என்பதற்கு ஆதாரங்களும், முகாந்திரமும் இருப்பதாக கூறி, வழக்கு தொடர்பாக வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர்பாலுக்கும் டிசம்பர் 23ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்