Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விடுதலை சிறுத்தை கட்சி விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம்  சார்பில் மூன்று கண்டன ஆர்ப்பாட்டம்

டிசம்பர் 10, 2020 08:20

கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் விவசாய தொழிலாளர் இயக்கம் சார்பில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நிவர் மற்றும் புறவி புயல் மழை வெள்ளத்தால் பாதித்துள்ள விவசாய நெல் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என போராட்டம் நடைபெற்றது.

மேலும் மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி டில்லியில் 15  நாட்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகளையும், விவசாயத்தையும் அழிக்கும் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி  அத்தியாவசிய பொருட்கள் சட்டம், விவசாயிக்கு ஊக்குவிக்கும் சட்டம், விவசாயிகள் ஒப்பந்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் காந்தி பூங்கா அருகே விவசாய தொழிலாளர் இயக்கம் மாநில துணை செயலாளர் நாகப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்பாளர்,  பாலகுரு தமிழ்வளவன்  மண்டலச் செயலாளர் விவேகானந்தன் மாநில பொருளாளர் வெண்மணி மாவட்ட பொறுப்பாளர்உறவழகன் முன்னாள் மாவட்டச் செயலாளர் தமிழருவி சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் முல்லைவளவன், சந்திரசேகர்  பாலசுப்பிரமணியன், தமிழன் , தொண்டரணி மாவட்ட துணைச் செயலாளர் செல்வம், வழக்கறிஞர் அணி மாநில பொறுப்பாளர் நந்திவனம் பாலா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

தலைப்புச்செய்திகள்