Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லி விவசாயிகளுக்கு ஆரவு தெரிவித்து பந்தநல்லூரில் ஆர்பாட்டம்

டிசம்பர் 10, 2020 07:41

தஞ்சை மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான திருப்பனந்தாள் ஒன்றியத்திற்கு உட்பட்ட பந்தநல்லூர் கடைவீதியில் திரண்டு வந்த விவசாயிகள், டெல்லியில் கொட்டும் பணியிலும் குளிரிலும் வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெரவேண்டும் என போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், நிவர், மற்றும் புரெவி புயல், மழை வெள்ளத்தில் பாதித்துள்ள விவசாய நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரியும், மழையினால்  இடிந்த வீடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும், மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் செங்குட்டுவன், பந்தநல்லூர் சராக விவசாயிகள் சங்க தலைவார் சங்கர், செயலாளர் முத்துசாமி, பொருளாளர் சுப்பிரமணியன். பெருவிவசாயி வன்னிக்குடி அன்பழகன், அமமுக விவசாய அணி ஓ,செ கலியமூர்த்தி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

ஏற்கனவே விவசாயிகளை ஆதரித்து பொது பந்த் கடைபிடிக்கப்பட்டு பந்தநல்லூர் பகுயில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

தலைப்புச்செய்திகள்