Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெண்களை கூடுதல் அழகாக்கும் மூக்குத்தி..!

டிசம்பர் 10, 2020 07:08

பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பதில் ஒரு பங்கு வகிக்கிறது மூக்குத்தி. அதாவது பெண்களின் முகத்தில் லேசான குறைபாடுகள் இருந்தாலும் அதை மறைத்து கூடுதல் ஈர்ப்பு சக்தியை தருவது மூக்குத்தியின் சிறப்பாகும். இந்த மூக்கு குத்துவதிலும் பெண்கள் கவனிக்கவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

நெற்றிக்கு பொட்டு, கண்களுக்கு மை, உதடுகளுக்கு லிப்ஸ்டிக்.. போன்று முகத்தில் ஒவ்வொரு உறுப்பையும் அழகு செய்யும் பெண்கள் அந்த வரிசையில் மூக்குக்கு மூக்குத்தி சூடிக்கொள்கிறார்கள். திருமண ஆபரணங்களில் குறிப்பிடத்தக்கதாக மூக்குத்தி இருக்கிறது. மூக்குத்தியின் வரலாறு மிகவும் பழமையானது. ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வேதங்களிலும் மூக்குத்திக்கு சிறப்பிடம் தரப்பட்டிருக்கிறது. இடது பக்கம் மூக்கு குத்தினால் அந்த பெண்களுக்கு மாதவிலக்கு கால வலியும், பிரசவ வலியும் குறையும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

 பெற்றோர், தாய்மாமன், கணவர் ஆகியோரிடமிருந்து மட்டுமே பெண்கள் மூக்குத்தி வாங்க வேண்டும் என்ற நிபந்தனை முன்காலத்தில் இருந்தது. வேறுயாரிடமாவது இருந்து மூக்குத்தியை பெற்றால் அது குற்றமாகவும் கருதப்பட்டது. மூக்கு குத்துவதிலும் பெண்கள் கவனிக்கவேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. அனுபவம் வாய்ந்தவர்களிடமே மூக்கு குத்தவேண்டும். நாடி நரம்புகள் பாதிக்காத அளவுக்கு குத்துவது அவசியம். 

தங்கத்திலான மூக்குத்தியே சிறந்தது. வேறு உலோகங்களில் செய்யப்பட்ட மூக்குத்திகள் பெரும்பாலானவர்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். மூக்குத்தி அணிந்ததும் அந்த பகுதியில் ஏதாவது அலர்ஜி ஏற்பட்டால் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

மூக்கு குத்தியதும் பெரும்பாலானவர்கள் அவ்வப்போது அந்த பகுதியை தொட்டுப்பார்ப்பார்கள். தொடுவது தவறு. தொட்டால் அந்த காயம் ஆற தாமதமாகும். காயம் முழுவதும் ஆறுவதற்கு முன்பு மூக்குத்தியை கழற்றக்கூடாது. கழற்றினால் அந்த துவாரம் விரைந்து மூடிவிடும்.

மூக்குத்தி அணிபவர்கள் குளித்துவிட்டு தலை துவட்டும்போதும், கூந்தலை சீவும்போதும் கவனம் கொள்ளவேண்டும். துணியோ, முடியோ மூக்குத்தியில் சிக்கிக்கொள்ளும். அது வலி நிறைந்த அவஸ்தையாகிவிடும். மூக்குத்தி அணிந்த காயம் ஆறும்வரை மல்லாந்து படுத்து தூங்கவேண்டும். இல்லாவிட்டால் தலையணை விரிப்பு போன்றவைகளில் மூக்குத்தி பட்டு வலிதோன்றும்.

மற்ற வேளைகளில் முகத்தை கழுவாவிட்டாலும் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும். அதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம். முகத்தை தண்ணீரில் அடிக்கடி கழுவுவது சரும பராமரிப்பின் ஒரு அங்கமாகும். அது அசுத்தங்கள், அழுக்குகளில் இருந்து சருமத்தை காக்க உதவும். நிறைய பேர் காலையில் எழுந்ததும் முகத்தை கழுவுவார்கள். அதன்பிறகு எப்போதாவதுதான் கழுவுவார்கள். 
பல்வேறு சரும பிரச்சினைகளில் இருந்து தற்காத்து கொள்வதற்கு முகத்தை அவ்வப்போது கழுவுவது அவசியமானது. சிலருடைய முகத்தில் கருப்பு நிறத்திலோ, வெள்ளை நிறத்திலோ ஆங்காங்கே புள்ளிகள் தென்படும். அவை சரும துளைகள் அடைபடுவதால் ஏற்படுபவை. முகத்தை கழுவும்போது சரும துளைகள் சுவாசிக்கவும் வழிபிறக்கும்.

முகப்பரு ஏற்படுவதற்கு மோசமான சரும பராமரிப்பும் ஒரு காரணமாகும். சரும துளைகள் அடைப்பு, அழுக்குகள், தூசுக்கள் படிவது, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், வாழ்க்கை முறை போன்றவை இதர காரணங்களாகும். சருமத்தை தூய்மையாக பராமரிக்கும்போது முகப்பரு பிரச்சினை எட்டிப்பார்க்காது.

இரவில் தூங்க செல்லும் முன்பு சருமத்தை கழுவும்போது அதில் இருக்கும் அழுக்குகள் நீங்கி சருமம் சுவாசிப்பதற்கு வழிவகை ஏற்படும். குறிப்பாக மேக்கப்பை நீக்கி விடுவது அவசியமானது. இரவில் முகம் கழுவுவது முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை அப்புறப்படுத்துவதற்கும் உதவும். புதிய செல்கள் தோன்றுவதற்கு வாய்ப்பு ஏற்படுவதோடு சருமம் பிரகாசமாக ஜொலிப்பதற்கும் வழிவகை ஏற்படும். எனவே மூக்குத்தி அணிவோம்! முகத்தை கொலிப்பாக்கும்வோம்..
 

தலைப்புச்செய்திகள்