Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேப்ப மரத்தில் விடாமல் வடியும் பால்; மக்கள் பரவசம்  

டிசம்பர் 10, 2020 05:40

சென்னை: வேப்ப மரத்திலிருந்து விடாமல் பால் வடிவதால் மக்கள் பக்தி பரவசத்தோடு தரிசனம் செய்து செல்கிறார்கள். தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் அருகேயுள்ளது வாடிக்கோட்டை.

இந்த கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி கனகம்பாளின் விவசாய நிலத்தில் உள்ள வேப்ப மரம் ஒன்றில்தான் கடந்த 3 நாட்களாக விடாமல் பால் வடிந்து வருகிறது. இதையறிந்த அக்கம் பக்கத்து ஊர்க்கார மக்களும், ஆச்சரியத்தோடு வந்து பார்த்து வருகின்றனர். மேலும் இது அம்மன் அருள் என்று கூறி பலரும் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
 

தலைப்புச்செய்திகள்