Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மழையால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த கணக்கெடுப்புகள் நடந்து வருகிறது: வைத்தியலிங்கம் எம்.பி.

டிசம்பர் 07, 2020 12:24

தஞ்சாவூர்: கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலக மகாமக அரங்கில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் ம கோவிந்தராவ் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆர்.வைத்தியலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு, குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் பகுதி மற்றும் முழுமையாக சேதமுற்ற 153 குடும்பங்களுக்கு ரூபாய் 6 லட்சத்தி 28 ஆயிரத்தி 200 மற்றும் 23 கால்நடைகள் இறப்பிற்கு ரூபாய் ஒரு லட்சத்தி 13 ஆயிரமும் நிவாரணம் என மொத்தம் 7 லட்சத்தி 41 ஆயிரத்தி 200 ரூபாய் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர், கும்பகோணம் கோட்;டாட்சியர் பெ விஜயன், முன்னாள் எம்பி பாரதிமோகன், முன்னாள் எம்எல்ஏ இராமநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர் 

தலைமையுரையில் பேசிய தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், தஞ்சை மாவட்டத்திற்கு வடகிழக்கு பருவமழையால் கிடைக்க வேண்டிய மழை அளவு 1098 மி.மீட்டரில் இதுவரை 880 மி.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது என்றும், சம்பா தாளடி பருவ நெல் சாகுபடிக்கு ஒரு லட்சத்தி 26 ஆயிரம் எக்டேர் என இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு லட்சத்தி 25 ஆயிரம் எக்டேர் சாகுபடி நடைபெற்றுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதில் வைத்தியலிங்கம் எம்பி பேசியதாவது: நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு, தமிழக முதல்வர், மத்திய அரசிடம் இருந்து நிவாரணம் வழங்க நிதி கோரியுள்ளார். அதிகமாக பாதிக்கபட்ட மாவட்டங்களுக்கு அமைச்சர்களை நேரில் அனுப்பி பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக அரசின் நிவாரண உதவி கிடைக்க செய்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் 10 ஆயிரம் எக்டேர் அளவிற்கு மட்டுமே பயிர்கள் தண்ணீரில் முழ்கியுள்ளது. எனவே இங்கு மத்திய ஆய்வுக்குழு வர வாய்ப்பில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் தொடர்ந்து கணக்கெடுப்புகள் நடந்து வருகிறது என அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்