Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாதுகாப்பு கவச உடையுடன் கொரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம்- கேரள தேர்தல் கமி‌ஷன் ஏற்பாடு

டிசம்பர் 07, 2020 09:46

கேரளாவில் நாளை நடைபெறும் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு பதிவின் போது கொரோனா நோயாளிகள் வாக்களிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் சுகாதார அதிகாரியின் ஒப்புதல் பெற்று வாக்கு சாவடிக்கு சென்று வாக்களிக்கலாம்.

இதற்காக அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் வழங்கப்படும் பாதுகாப்பு கவச உடையை அணிந்து செல்ல வேண்டும். வீடுகளில் சிகிச்சை பெறுவோர் அவர்களே கவச ஆடைகளை வாங்கி கொள்ள வேண்டும். பொது வாக்காளர்கள் வாக்களித்த பின்னர் நாளை மாலை 6 மணிக்கு மேல் வாக்கு சாவடிகளில் அவர்கள் வாக்களிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

தலைப்புச்செய்திகள்