Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்

டிசம்பர் 06, 2020 07:45

புதுடெல்லி: அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனம் ஆகியவை இணைந்து கொரோனாவுக்கு எதிரான ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இந்த தடுப்பூசி 95 சதவீதம் பயன் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே பைசர் நிறுவன தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு பிரிட்டன் அரசு முதலில் அனுமதி அளித்து, விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அதன்பின்னர், பைசர் நிறுவன தடுப்பூசிக்கு பக்ரைன் நாடும், அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளித்தது.
 
இந்நிலையில், இந்தியாவில் பைசர் நிறுவன தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்கும்படி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் பைசர் இந்தியா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.  தடுப்பூசியை பயன்படுத்துவதற்கான அனுமதி பெற அமெரிக்க உணவு மற்றம் மருந்து நிறுவனத்திடமும் ஐரோப்பிய சுகாதாரத்துறையிடனும் பைசர் நிறுவனம் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்